மார்ச் 14 அல்லது 15-ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
வரும் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் செல்லும் தேர்தல் குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 14 அல்லது 15-ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.