Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்யாசாகரின் வித்தியாசமான முயற்சி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:17 IST)
தமி‌ழ்‌த் திரையுலகின் தரமான இசையமைப்பாளர்களின் பட்டியலில் வித்தியாசாகருக்கு எப்போதும் நிரந்தர இடமுண்டு. இவர் தமிழுக்கு தந்திருக்கும் மெலடிகளுக்காகவே மெலடி கிங் பட்டத்தை இவருக்கு தரலாம்.

திரையிசையில் பிஸியாக இருப்பவர் சமீபத்தில் லேகா சொனாட்டன் அலுவலகத்துக்கு திடீர் விஜயம் செய்தார். லேகா சொனாட்டன் நிறுவனம் இசை ட்ராக்குகளை உருவாக்கி தேவைப்படுகிறவர்களுக்கு விற்பனை செய்து வரும் சர்வதேச நிறுவனம். இதன் இந்திய பிரிவுக்கான தலைவர் லேகா ரத்னகுமாரை சந்தித்து உரையாடினார் வித்யாசாகர்.

இந்த சந்திப்பின்போது தங்கள் நிறுவனத்துக்காக இசைக் கோவைகளை உருவாக்கித் தரும்படி வித்யாசாகரை கேட்டுக் கொண்டிருக்கிறார், லேகா ரத்னகுமார். வித்யாசாகரும் இதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேகா சொனாட்டனின் இசைக் கோவைகள் உலகம் முழுவதும் விற்பனையாகி வருகின்றன. இசையமைப்பாளர் ஒருவர் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை லேகா சொனாட்டன் வாயிலாக எளிதாக சென்றடைய முடியும் என்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் எளிதாக பெறமுடியும்.

சர்வதேச அங்கீகாரத்தைப்பெற அனைத்து தகுதியும் உடையவர் வித்யாசாகர். அவருக்கு நம் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments