Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கண்டனம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:06 IST)
தொடர்ந்து கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவண்ணமாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் நூறு கோடி, இருநூறு கோடி என்கிற முதலீட்டில் படங்களை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

அத்தோடு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்கள் வாடகை என்ற பெயரில் தன் வசம் வைத்துள்ளது. அப்படி ஒவ்வொரு கம்பெனிகளுக்கும் தியேட்டர்கள் உண்டு.

பெர ி ய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்றாலும் படம் சரியாக ஓடவில்லை. உதாரணத்துக்கு அட்லாப்ஸ் எடுத்த கிரீடம், மோசர்பேர் எடுத்த வெள்ளித்திரை, ஐங்கரனின் பில்லா, நேபாளி ஆகிய படட்ஙகள்.

இப்படி தோல்விப் படங்கள் கொடுத்தாலும் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். இதனால் பாதிக்கப்படுவது குறைந்த முதலீட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும், புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களும்தான்.

எனவே, இப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட் படங்களையும், புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதில் சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

Show comments