Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒழுங்கா ஓட்டுப்போடு!.. என் பாவம் சும்மாவிடாது!.. சாபம் விட்ட சீமான்..

Advertiesment
seeman
திமுக அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழக அரசியல் களத்தில் புதிய அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான். நாம் தமிழர் கட்சியை துவங்கியது முதலே திராவிட கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். இதன் காரணமாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ் தேசியத்தை சீமான் தூக்கிப் பிடிக்கிறார்.. முருகன் கடவுள் அல்ல.. என் பாட்டன் என்கிறார்.. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட சீமானுக்கு 8 சதவீத வாக்குகள் பதிவானது..

ஆனாலும், கட்சி துவங்கியது முதலே எந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறார் சீமான். அவரும் பல வருடங்களாக கத்தி வந்தாலும் இதுவரை அவருக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை. இந்நிலையிதான் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சீமான் வேட்பாளர்களை சீமான் நிறுத்தியிருக்கிறார்.

மேலும் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். இந்நிலையில் குன்னூரில் பேசிய சீமான் ‘ஒன்னு என்னை கூட்டிட்டு போய் சாப்பாட்டுல வச்சு விஷத்தை வச்சி கொன்னுடு.. நிம்மதியா என்னை சாக விட்டிடு.. இல்லன்னா நாட்டை கொடுத்துட்டு வாழ பாரு.. உருப்படியா ஒரு முடிவை எடு.. கத்தி கத்தி சாக விடாத.. 15 வருஷமா கத்திட்டேன்.. என் பாவம் உன்ன சும்மா விடாது’ என பொதுமக்களுக்கு சாபம் விட்டிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயேசுவின் அடக்க துணியில் இந்திய டி.என்.ஏ!.. ஆய்வில் ஆச்சர்ய தகவல்...