Publish Date: Fri, 03 Apr 2026 (18:24 IST)
Updated Date: Fri, 03 Apr 2026 (18:26 IST)
பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனது முதலே தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இடையில் பலமுறை மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திணித்து தமிழகத்தில் ஹிந்தியை கொண்டுவர பல முயற்சிகள் செய்தது. ஆனால் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் அதை அனுமதிக்கவில்லை..
இந்நிலையில்தான் பத்தாம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயம் ஆக்கும் பணியை சிபிஎஸ்சி தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டில் முதற்கட்டமாக 6ம் வகுப்புகளில் முன்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.. அதில் இரண்டு இந்திய மொழிகள் மகிழ்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக 2030 - 31க்குள் 10ம் வகுப்பு வரை இக்கொள்கை கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
அதே நேரம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு பள்ளிகளில் வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..