Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஸ்ரேயாவு‌க்கு ப‌தி‌ல் விஜயலட்சுமி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:37 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து தயாராகும் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து அதே கம்பெனிக்கு குருப் கம்பெனி படம் இயக்குகிறார் வெற்றிமாறன். கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.

படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்காததால் தான் கொடுத்த கா‌ல்‌ஷ‌ீட் வீணாகி விட்டதாகக் கூறி அடவான்ஸ் பணத்தை நடிகர் சங்கம் முலம் திருப்பிக் கொடுத்தார் ஸ்ரேயா.

அதேநேரம் ஜெமினிக்காக தனுஷ் நடிக்கும் படத்துக்கு கா‌ல்ஷ‌ீட் கொடுத்திருந்தார் ஸ்ரேயா. இது தெரிய வந்ததும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பிரச்சனையை எடுத்துச் சென்றார் கதிரேசன்.

ஜெமினி படம் முடிந்த பிறகு கதிரேசன் படத்தில் ஸ்ரேயா நடித்துக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்ரேயாவுக்கு உத்தரவிட்டது.

ஆனால், படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போயுள்ளது. இதனால் ஸ்ரேயாவுக்குப் பதில் விஜயலட்சுமியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments