Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையுலகின் நான்காம்கட்ட போராட்டம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:22 IST)
இலங்கை‌த் தமிழர் மீதான தாக்குதலை இலங்கை அரசு கைவிட வேண்டும், தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கைக்கு ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்பது போன்ற கோ‌ரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வரும் 5ம் தே‌‌தி ஒரு நாள் உண்ணாவிரத‌ப் போராட்டத்தை நடத்துகிறது.

பெப்சி சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் கூட்டமைப்பை‌ச் சேர்ந்த 15 சங்கங்கள் கலந்து கொள்கின்றன.

வடபழனி அருணாசலம் சாலையில் இந்த உண்ண ா‌வி ரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. உண்ணாவிரதத்தை தய ா‌ர ிப்பாளர்கள் சங்க‌த் தலைவர் ராம. நாராயணன் தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே திரையுலகினர் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினர். மனித சங்கிலி போராட்டத்திலும் கலந்து கொண்டனர். ஒன்றாம் தேதி நடிகர்கள் உண்ணாவிரத‌ப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். அந்த வகையில் திரையுலகினர் நடத்தும் நான்காம்கட்ட போராட்டம் இது.

உண்ணாவிரதம் குறித்த தகவலை நேற்று பெப்சி தலைவர் விஜயன் நிருபர்களிடம் தெ‌ரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments