Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.‌ஜி.ஆரை இமிடேட் செய்யும் விவேக்!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (14:02 IST)
யாரையேனும் இமிட்டேட் செய்யாமல் நடிக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார் நடிகர் விவேக். நம்பியார், சிவா‌ஜ ி, ர‌ஜினி, கமல் என்று இவர் மிமிக்க ி‌ரி செய்யாதவர்கள் யாரும் இல்லை.

மாதவன் நடிக்கும் குரு என் ஆளு படத்தில் நடிகை ஸ்ரேயாவைப் போல் உடையணிந்து நடித்துள்ளார் விவேக். இந்த கெட்டப்புக்கு நல்ல விளம்பரம் கிடைத்ததால் அதே ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ளார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கும் வாடா படத்தில் சுந்தர் சி-யுடன் நடிக்கிறார் விவேக். இதில் எம்.‌ஜ ி. ஆரைப் போல் உடை மற்றும் மேக்கப்புடன் தோன்றுகிறார். எம்.‌ஜ ி. ஆர். மறைந்தாலும் அவரது ரசிகர் செல்வாக்கு அப்படியே உள்ளது.

எம்.‌ஜ ி. ஆர் குறித்து இசகு பிசகாக ஏதேனும் செய்தி வந்தால் இப்போதும் கண்டனம் தெ‌‌ரிவிக்க கணக்கில்லாத ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விவேக் தொட்டிருப்பது ஆயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பி.

ஒரு படத்தில் விவேக் எம்.‌ஜ ி. ஆருக்கே டாட்டா காட்டினவன்டா என்பார். இதை கேட்கும் பொது ஜனம் அவரை புரட்டி எடுக்கும். வேண்டிய அளவு கிடைத்த பிறகு விவேக் சொல்வார். ஏம்.‌ஜ ி. ஆர். அந்தப் பக்கமா க ா‌ர ில் போகும் போது நான் ஓரமாக நின்று டாட்டா காட்டினேன் என்று.

டாட்டா காட்டியதற்கே இப்படி என்றால் படம் முழுக்க அவரை இமிட்டேட் செய்தால்? சின்ன கலைவாணரே ஜாக்கிரதை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments