அஸ்வினுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் தமிழக வீரர்!

vinoth
வியாழன், 23 அக்டோபர் 2025 (08:48 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறைக் கோப்பைகள் வென்றுள்ள அணிகளில் ஒன்று சி எஸ் கே.  அந்த அணி இதுவரை ஐந்து முறைக் கோப்பை வென்று அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது. கடந்த சீசனில் அந்த அணிக்கு ருத்துராஜ் கேப்டனாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் காயம் காரணமாக அவர் பாதியிலேயே விலகியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார்.

சென்னை அணியின் அடையாளங்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த சீசனில் மீண்டும் சென்னை அணிக்குத் தேர்வானார். ஆனால் அவர் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதனால் இனிமேல் ஐபிஎல் தொடரில் எதிர்காலம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்த சீசனில் அஸ்வினுக்குப் பதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை வாங்க சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ஏ பிரிவில் முதலிடம்..

ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

உலகக்கோப்பை டி20.. SA vs AFG.. சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள்.. 2வது சூப்பர் ஓவரில் நடந்த அதிசயம்..

ராகுல்காந்தியை சந்தித்த சச்சின்.. பிரதமர் மோடியை சந்தித்த ஜடேஜா! இருவருக்கும் என்ன காரணங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments