கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை. திரையரங்கில் மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க விக்ரம் சம்மதித்துள்ளார். அந்த இயக்குனர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது. அந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஒரு ப்ரமோஷன் வீடியோவோடு இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்துக்காக முதலில் விக்ரம்முக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது விக்ரம்மின் மார்க்கெட் மற்றும் ஓடிடி வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை ஆகியவற்றின் காரணமாக தயாரிப்பாளர் அவரின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சொல்லிக் கேட்டாராம். அதனால் கிட்டத்தட்ட 50 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள விக்ரம் சம்மதித்துள்ளாராம்.