Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“நீ கவனமாக வண்டி ஓட்டவேண்டும்… “ அன்றே அட்வைஸ் செய்த ஷிகார் தவான்!

Advertiesment
“நீ கவனமாக வண்டி ஓட்டவேண்டும்… “ அன்றே அட்வைஸ் செய்த ஷிகார் தவான்!
, சனி, 31 டிசம்பர் 2022 (10:36 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் நேற்று அதிகாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஷிகார் தவான் ரிஷப் பண்ட்டுக்கு அட்வைஸ் செய்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் ரிஷப் பண்ட் “எனக்கு ஏதாவது அட்வைஸ் சொல்லுங்கள்” எனக் கேட்கிறார். அதற்கு சற்று யோசிக்காமல் தவான் “நீ கார் ஓட்டும்போது கவனமாக இருக்கவேண்டும்” எனக் கூற, அதைக் கேட்டு பண்ட் ‘உண்மைதான்’ என்பது போல சிரிக்கிறார்.

பண்ட்டின் விபத்துக்கு சாலையில் இருந்த பனி மூட்டமும், பண்ட் தூக்கக் கலக்கத்தில் இருந்ததுமே என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு நற்கருணை வீரர் விருது!