Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண்ட் விபத்து சம்மந்தமாக பதிவிட்ட நடிகை… கடுப்பான ரசிகர்கள்!

பண்ட் விபத்து சம்மந்தமாக பதிவிட்ட நடிகை… கடுப்பான ரசிகர்கள்!
, சனி, 31 டிசம்பர் 2022 (10:20 IST)
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை சீண்டும் விதமாக கடந்த காலங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வந்தார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் நேற்று அதிகாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

இந்நிலையில் பண்ட் தன்னை கடந்த காலத்தில் காதலித்ததாக கூறி சர்ச்சைகளைக் கிளப்பிய ஊர்வசி நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தனது ஆடம்பரமான புகைப்படத்தைப் பகிர்ந்து ‘பிராத்திக்கிறேன்’ எனக் கூறி பதிவிட்டிருந்தார்.

அவர் பண்ட்டை கேலி செய்வதாக உடனடியாக கிரிகெட் ரசிகர்கள் ஊர்வசியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மங்காத்தா படத்தோடு துணிவு படத்துக்கு இருக்கும் தொடர்பு? ரசிகர்கள் ஊகம்!