Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிண்டல் செய்த ரசிகரை அடித்து, உதைத்த கிரிக்கெட் வீரர்! – வைரலாகும் வீடியோ!

Advertiesment
Hassan Ali
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:46 IST)
2021 உலகக்கோப்பை டி20ல் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதை சொல்லி கிண்டல் செய்த ரசிகரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஹசன் அலி. கடந்த 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு இவர் வேறு எந்த போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. அந்த உலகக்கோப்பை போட்டியிலும் கூட அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்டை எதிர்கொண்டபோது அவரது முக்கியமான கேட்ச் ஒன்றை பிடிக்காமல் ஹசல் அலி தவறவிட்டார். அதன் காரணமாக ஆஸ்திரேலியா வென்று இறுதி போட்டிக்கு சென்றது.

அதை சொல்லி ஹசன் அலியை அடிக்கடி ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம். சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் ட்ராபி டி20 போட்டியில் ஹசன் அலி பங்கு பெற்றிருந்தார். அப்போது பார்வையாளர்கள் சிலர் மேத்யூ வேடின் கேட்ச்சை தவறவிட்டதை சொல்லி ஹசன் அலியை கிண்டல் செய்துள்ளனர்.

அவர் மைதானத்தில் இருந்ததால் பொறுமையாக விளையாடிவிட்டு பின்னர் போட்டி முடிந்து பார்வையாளர் மாடம் வழியாக சென்றபோது முன்னர் கிண்டல் செய்த அந்த ரசிகரை உதைத்து தாக்கியுள்ளார். பதிலுக்கு ஹசன் அலியை ரசிகர்களும் தாக்க முயல அங்கு பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரேசில்- குரோஷியா