Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ODI கிரிக்கெட்: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் தேர்வு

Advertiesment
india won wi
, ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (11:41 IST)
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் காயம் காரணமாக கடைசி நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.

இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்குள் திரும்பியுள்ளனர்.

இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்), ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெய் கீப்பர்.), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  மிர்பூரில் நடைபெறும் இன்றைய முதல் ஒரு நாள் போட்டியில்,  வங்கதேச அணி கேப்டன் டாஸ் வென்று  லிட்டன் தாஸ் பந்துவீச்சு தேர்வு செய்தார். எனவே, ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

Edited by Sinoj

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாங்காங் படகுப் போட்டியில் இந்தியா தங்கம்!