Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
, திங்கள், 8 அக்டோபர் 2018 (11:55 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். இவர் ஓப்பனிங் இறங்கினால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கிலிதான். நாலாபக்கமும் பந்தை சிதறடிப்பதில் திறமையானவர். இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவருக்கு இணையாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இன்னும் அந்த அணிக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இன்று திடீரென விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஹைடன் திடீரென எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.

webdunia
தற்போது மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைடன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததை அறிந்து அவரது ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஹஃபீஸ் சதம் –பாகிஸ்தான் நிதானத் தொடக்கம்