Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி –என்று தணியும் இந்த செல்பி மோகம்?

Advertiesment
விபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி –என்று தணியும் இந்த செல்பி மோகம்?
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (16:17 IST)
இந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

உத்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள காசியாபாத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான விமானப்படை தளம் அமைந்துள்ளது. அங்கு சோதனைக்காக விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம். அப்படி இயக்கப்பட்ட விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரோடு மீட்கப்பட்டனர்.

விமானம் விபத்துக்குள்ளான செய்தி அருகில் இருக்கும் ஊர்மக்களுக்கு பரவ அனைவரும் விபத்துப் பகுதியை சூழ்ந்து கொண்டனர். இது போல விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடிக்கும் வாய்ப்போ அல்லது வெடிக்கும் வாய்ப்போ அதிகம். அந்த அபாயகரமான சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத சிலர் விபத்துக்குள்ளான விமானத்தைச் சுற்றி நின்று செல்பி எடுக்க ஆரம்பித்தனர். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் இதுபோல செல்பி எடுக்க ஆரம்பித்தனர்.

எந்த வித்தியாசமான நிகழ்வுகளைப் பார்த்தாலும் அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் இது போல் செல்பி எடுக்கத் துடிக்கும் நம்மவர்களின் ஆர்வக்கோளாறு மனநிலை என்றுதான் மாறுமோ தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேஸ்புக் மூலம் காதல் ; பெண் மருத்துவரிடம் உல்லாசம் : ஏமாற்றிய வாலிபர்