Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்… அஸ்வின் சொல்லும் காரணம்!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (14:55 IST)
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் முதல் முதலாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் எடுக்கப்பட்டுள்ளார்.

அவர் ப்ளேயிங் லெவனில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை ஜெய்ஸ்வால் விளையாடியுள்ளார். அதனால் அவரின் ஒருநாள் அறிமுகம் என்பது மிகவும் சரியானது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் எடுக்கப்பட்டது குறித்து ஆதரவாகப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் “ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க வேண்டும். அப்போதுதான் இடது கை- வலது கை கூட்டணி கிடைக்கும். மூன்றாவது இடத்தில் கில் விளையாட, கோலி நான்காவது இடத்தில் விளையாட வேண்டும். அதன் பின்னர் ராகுல் அல்லது பண்ட், ஆறாவது இடத்தில் பாண்ட்யா என வரிசை இருந்தால் மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments