இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பாக்ஸிங் டே போட்டியில் இந்திய அணி தோற்றால் கூட இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் அரைசதம் அடித்து இந்திய அணியை கௌரவமான தோல்வி பெறவைத்தார்.
அவரின் மிகச்சிறந்த ஆட்டங்களால் வர்ணனையாளர்கள் அவரை நியு கிங் என புகழ்த் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.
டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வரும் ஜெய்ஸ்வால் இன்னும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால் மாற்றுத் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.