Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2024 ஆம் ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டியாக அமைந்த பாக்ஸிங் டே டெஸ்ட்!

2024 ஆம் ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டியாக அமைந்த பாக்ஸிங் டே டெஸ்ட்!

vinoth

, திங்கள், 30 டிசம்பர் 2024 (09:41 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தின் மூலம் 474 ரன்கள் சேர்த்தது.  பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க வைத்து 369 ரன்கள் சேர்க்க வைத்தனர். சிறப்பாக ஆடிய நிதீஷ் குமார் 114 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.  முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸி அணி 263 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து தற்போது இந்திய அணி நான்காவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டி இதுதான் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை இந்த போட்டியில் 2200 பந்துகளுக்கு மேல் வீசப்பட்டுள்ளது. இன்னும் 43 ஓவர்கள் வீசப்படவுள்ளது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களுக்கு மேல் நடப்பதில்லை. ஆனால் இந்த போட்டி டெஸ்ட் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியை அடுத்து ரோஹித் ஷர்மாவுக்கும் கேலி சித்திரம் வெளியிட்ட ஆஸி ஊடகம்!