Publish Date: Fri, 10 Jan 2025 (07:10 IST)
Updated Date: Fri, 10 Jan 2025 (07:31 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர்.
அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இந்திய அணி முன்னாள் வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அஸ்வினின் தந்தை கூட அஸ்வின் அவமானப்படுத்தப் பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் தனக்கு யார் மேலும் வருத்தம் இல்லை எனவும் ஓய்வு குறித்து நிறைவாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தான் ஏன் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவில்லை எனப் பேசியுள்ளார். அதில் “நான் கேப்டன் ஆகாததற்குக் காரணம் இஞ்ஜினியரிங்க்தான். யாராவது என்னிடம் உன்னால் அது முடியாது என்று சொன்னால் எழுவேன். ஆனால் உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன். என்னிடம் பலரும் நீ இந்திய அணிக்குக் கேப்டன் ஆகலாம் என்றார்கள். அதனால் நான் தூங்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.