
விருச்சிகம்-வேலை
எந்த துறையில் இருந்தாலும் விருட்சிக ராசிக்காரர்கள் புகழ்பெறுவர். இவர்களது வெற்றி குறித்து ஜாதகத்தை வைத்தே தீர்மானிக்க இயலும். எந்த வேலை செய்தாலும் பணம் கிட்டும். நல்ல மனதுடன் பணத்தை செலவழிப்பதே இவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பாக அமையும். கலை ரசனை மீது ஆர்வம் இருப்பதால் அதிலும் புகழ் பெற வாய்ப்புண்டு. மருத்துவத்தில் பெரிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புண்டு. கிராமம் அல்லது நகரத்தின் மத்தியப் பகுதியில் வசிப்பது அல்லது வடக்கு திசையில் வசிப்பது, தெற்கு திசையை நோக்கிய வாசல் அமைந்த வீட்டில் வசிப்பது நல்லது. கடல், ஆறு, நீர் நிலைக்கு அருகே வசிப்பது உகந்தது. கிணறு உள்ள வீட்டில் இருப்பதும் நல்ல பலனைத் தரும்.