Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் 52% அதிகரித்த கொரோனா பரவல்: உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (16:48 IST)
உலகம் முழுவதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தரும் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இந்த நிலையில்  கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  52 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.’

 எனவே பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது. கொரோனா மட்டுமின்றி ப்ளூ மற்றும் நிமோனியா போன்ற பாதிப்புகளும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments