Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜய் ஞானமுத்து & பூஜா ஹெக்டே!

ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜய் ஞானமுத்து & பூஜா ஹெக்டே!
, வியாழன், 21 டிசம்பர் 2023 (07:36 IST)
தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து இப்போது ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க உள்ளது. ஆனால் அவர்கள் படம் தயாரிக்கப் போவது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையின் அடையாளமாக திகழும் இடத்தில் தொடங்கும் சூர்யா சுதா கொங்கரா பட ஷூட்டிங்!