அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலக பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துகொண்டது, அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், இந்த சந்திப்பு, அவர்களின் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
டிரம்பும் மஸ்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இருவருக்கும் இடையே நட்பு மேலும் வலுத்தது. ஆனால் டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன் இருவரும் ட்விட்டர் தளத்தில் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
இந்த மோதல்களுக்கு பிறகு, இருவரும் பொதுவெளியில் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்முறை. ஒரு சமீபத்திய நிகழ்வில் இருவரும் கைகுலுக்கி பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பு, இருவருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் "மீண்டும் நண்பர்களா?" என்ற கேள்வி இந்த சந்திப்பின் மூலம் எழுந்துள்ள நிலையில், வருங்காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.