தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பை பலப்படுத்த அவரது வீட்டை சுற்றி 110 ஏஐ கேமராக்களை பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை தமிழக காவல்துறையின் Care Cell செய்து வருகிறது. இந்த பிரிவு முதலமைச்சர் இல்லம், அலுவலகம், அவர் செல்லும் நிகழ்ச்சிகள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சருக்கான பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக முதலமைச்சர் வீடு உள்ள பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 110 கேமராக்களை 29 இடங்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் வீட்டை சுற்றியுள்ள செனடாப் சாலை, டிடிகே சாலை, எல்டாம்ஸ் ரோடு, கதீட்ரல் ரோடு, ம்யூசிக் அகாடமி ஜங்ஷன், அண்ணாசாலை, தேனாம்பேட்டை சிக்னல், திருவள்ளுவர் சாலை என பல பகுதிகளில் கேமரா பொருத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய நபர்கள் முதல்வர் வீடு உள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தால் ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக கண்டறிந்து காவல்துறை அதிகாரிகளுக்கு சில வினாடிகளில் குறுஞ்செய்த் செல்லும் வகையில் கட்டுப்பாடு மையமும் அமைக்கப்படுகிறது.
Edit by Prasanth.K