Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்த ஜோ பைடன்? – அமெரிக்காவில் பரபரப்பு!

Advertiesment
ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்த ஜோ பைடன்? – அமெரிக்காவில் பரபரப்பு!
, வெள்ளி, 13 ஜனவரி 2023 (08:55 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு தொடர்பான ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் அதிபராக தற்போது இருந்து வருபவர் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு கடந்த 2009 முதல் 2016 வரை அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும் ஜோ பைடன் பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டில் அவர் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தை சேர்ந்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் பல பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ரகசிய ஆவணங்களில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை.

ஆனால் ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக ஜோ பைடனிடம் விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகரஜோதியை பாக்காம போக மாட்டோம்! – காட்டில் கூடாரமிட்ட ஐயப்ப பக்தர்கள்!