Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரு நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்- அதிபர் உத்தரவு

Advertiesment
south america peru
, வியாழன், 12 ஜனவரி 2023 (00:19 IST)
தென்னமெரிக்க நாடுகளில்  ஒன்றான பெருவில் கடந்த மாதம் அதிபர்  பெட்ரோ காஸ்ட்டிலோ ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதையடுத்து, டினா பொலுவார்டே பெருவின் புதிய அதிபராக பதவியேற்றார். அதன்பின்னர், பெட்ரோவை கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், டினா பொலுவார்டே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பெட்ரோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களை கலைக்க வேண்டி போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இதில், இரு தரப்பினர் இடையே பிரச்சனை மூண்டதால் துப்பாக்கிச் சூட்டில் 17 பலியாகினர்.

இந்த நிலையில், பெரு நாட்டில் அதிபர் டினா தற்போது 3 நாட்களுக்கு  ஊரடங்கு அமல்படுத்தினார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டண்டைன் மறைவு