கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரஷிய அதிபர் தங்கள் நாட்டு ராணுவத்தை உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இப்போர் தொடங்கி ஒரு ஆண்டை நெருங்கியுள்ளது.
ஆனால், இப்போர் முடிந்த பாடில்லை. இரு நாட்டு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளனர். அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த புத்தாண்டு தினத்திலும் கூட உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷிய ராணுவம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது.
உக்ரைனும், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவியுடன் ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது.
இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டுமென மேற்கத்திய நாடுகளும் அரசியல் தலைவர்களும் கூறிவருகின்றனர்.
ஆனால், உக்ரைனில் ரஷியா தற்போது ஆக்ரமித்திருக்கும் பகுதிகளை ரஷியாவுக்குச் சொந்தமானது என ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதின் பிடிவாதமாக உள்ளார்.
''சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 36 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யவுள்ளதாக புதின் கூறியது திட்டமிட்ட தந்திரம். போர் நிறுத்தத்தின்போது, ரஷிய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறவில்லை'' என உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.