Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெற்கு சூடான்: அரசு நிகழ்ச்சியில் அதிபர் செய்த செயலால் சர்ச்சை!

SOUTH SUDAN
, செவ்வாய், 10 ஜனவரி 2023 (22:54 IST)
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அதிபர் சல்வா பொது நிகழ்ச்சியில் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில்  ஒன்றான தெற்கு சூடான், கடந்த13 ஆண்டுகளுக்கு முன்பு சூடனில் இருந்து விடுதலையானது.

அப்போது, அந்த நாட்டின் முதல் அதிபரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சல்வா கீர்.

இவர் கடந்த மாதம்  ஜிபா என்ற பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தேசிய கீதம் ஒலிக்கும்போது, அதிபர் சல்வா கீர், தன் மார்பில் கை வைத்தபடி நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் நின்றபடியே தன் ஆடையில் சிறு நீர் கழித்தார்.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது. இந்த   நிலையில்,  இந்த வீடியோவை ஒளிபரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயவு கூர்ந்து இனிமேலாவது சிந்தியுங்கள்!திருந்துங்கள்!- தங்கர் பச்சான்