சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் 'தலைவன் தலைவி'. இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வார்கள். அதன் பின் மீண்டும் சேர்ந்து வாழ்வது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இதுபோன்று, அமெரிக்காவில் ஒரு தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தாலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில், ராயன் - டிக்ஸன் என்ற தம்பதி, விவாகரத்து பெற்றபோதிலும் ஒரே வீட்டில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நிதிநிலைமைதான். சொத்துக்களை விற்று புதிய வீடுகளை வாங்குவது பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் உணர்வுபூர்வமாக இந்த வாழ்க்கை சவாலாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்காவில் பல தம்பதிகள், நிதி நெருக்கடி காரணமாக விவாகரத்து பெற்ற பிறகும், ஒரே வீட்டில் வாழும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.