இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான UPI, உலகளவில் தனது எல்லையை விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இந்த வசதியை, மொத்தம் 192 நாடுகளில் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, யுபிஐ ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், விரைவில் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பணப் பரிவர்த்தனைகளுக்காக வேறு எந்த முறையையும் சார்ந்திராமல், எளிதாக யுபிஐ மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். இது, உலகளாவிய நிதி பரிவர்த்தனை வரலாற்றில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.