அமெரிக்க அரசு விசா விதிமுறைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பிற நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த புதிய விதிகளால் பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய விதியின்படி, ஒருவர் எந்த நாட்டில் குடியுரிமை பெற்றிருக்கிறாரோ, அல்லது எந்த நாட்டில் சட்டபூர்வமாக வசித்து வருகிறாரோ, அந்த நாட்டில் இருந்து மட்டுமே அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். உதாரணமாக, ஜெர்மனியில் வசிக்கும் ஒரு இந்தியர் அமெரிக்காவுக்கு விசா பெற வேண்டுமென்றால், அவர் ஜெர்மனியிலிருந்து விண்ணப்பிக்க முடியாது. அதற்கு பதிலாக, தனது சொந்த நாடான இந்தியாவுக்கு வந்துதான் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் புதிய கட்டுப்பாடு, இந்தியாவில் விசா நேர்காணல்களுக்கான காத்திருப்பு காலத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்து விண்ணப்பிப்பதால், ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் இருக்கும் நிலையில், காத்திருப்பு காலம் பல மாதங்கள் வரை நீளலாம்.
இந்த புதிய விதிகள், வெளிநாடுகளில் பணிபுரியும், கல்வி கற்கும் அல்லது வசிக்கும் இந்தியர்களுக்கு அமெரிக்காவுக்குச் செல்வதை மிகவும் கடினமாக்கியுள்ளன.