பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தங்களது சொந்த நாட்டின் நிதியிலிருந்து பயிற்சி கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், காஷ்மீர் மாநில தாக்குதலுக்கு பின் பல நாடுகள் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ளன.
இந்த நிலையில், திடீரென உலக வங்கி பாகிஸ்தானுக்கு 108 மில்லியன் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது, இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் மாகாணத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, அவசியமான சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காக 108 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியாக ஒதுக்கி உள்ளது. அந்த பகுதியில் நடக்க இருக்கின்ற இரண்டு வெவ்வேறு திட்டங்களுக்கு 30 மில்லியன் மற்றும் 78 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த நிலையில், உலக வங்கி பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தேவையானது என்ற கேள்வி பலர் எழுப்பி வருகின்றனர்.