Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 ஆண்டுகளில் முதல்முறை.. நியூயார்க் நகரில் கடந்த 5 நாட்களில் துப்பாக்கிச் சூடு சம்பவவே இல்லை!

Advertiesment
30 ஆண்டுகளில் முதல்முறை.. நியூயார்க் நகரில் கடந்த 5 நாட்களில்  துப்பாக்கிச் சூடு சம்பவவே இல்லை!

Mahendran

, சனி, 25 ஜனவரி 2025 (08:29 IST)
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் அவர் பதவியேற்ற பின் நியூயார்க் நகரில் எந்த ஒரு துப்பாக்கி சூடும் நடைபெறவில்லை என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக நியூயார்க் நகரில் தொடர்ச்சியாக 5 நாட்களில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறவில்லை என்றும் இதன் மூலம் பொதுமக்கள் யாரும் மரணம் அடைவோ காயமடைவோ இல்லை என்றும் நியூயார்க் மாகாண காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2024 ஆம் ஆண்டில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏழு சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது டிரம்ப் அதிபராக பதவி ஏற்றவுடன் கடந்த ஐந்து நாட்களில் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் கூட இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவறு செய்தால் ட்ரம்ப் ஆட்சியில் தண்டனை உடனே கிடைக்கும் என்ற அச்சம் காரணமாகத்தான் துப்பாக்கி சூடு நடத்துபவர்கள் அமைதியாக இருக்கலாம் என்றும் இது அமெரிக்காவுக்கு மிகவும் பாசிட்டிவான விஷயம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூச்சிக்கொல்லி கலந்த மிளகாய் தூள்.. திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு!