பதஞ்சலி நிறுவனம் தயாரித்த மிளகாய்த் தொழிலில் பூச்சிக்கொல்லி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த மிளகாய் தூள்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு முன் சில பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் சந்தையில் இருந்து அனைத்து மிளகாய் பொடி பாக்கெட்டுகளையும் திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக நான்கு டன் மிளகாய் என்று பொருள்களை பதஞ்சலி நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்தின் உத்தரவுபடி 200 கிராம் பாக்கெட்டுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் பதஞ்சலி மிளகாய் தூள் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கி இருந்தால் உடனடியாக வாங்கிய இடத்திலேயே திரும்ப ஒப்படைக்கலாம் என்று அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் திரும்ப ஒப்படைக்கும் பொது மக்களுக்கு முழு தொகையும் திருப்பி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.