அமெரிக்காவில் சட்டவிரோதமாக 18,000 இந்தியர்கள் தங்கியிருக்கின்றனர். இதில், அதிபர் டிரம்ப் கட்டுப்பாடு காரணமாக அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ரத்து உட்பட சில முக்கிய உத்தரவுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்ற அவர் தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 18,000 என்றும், இவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 18,000 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என்றும், அவர்களை இந்தியா அழைத்து வர டிரம்ப் அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது என்றும் விரைவில் அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக போரை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.