Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன்! – சபதமெடுத்த ட்ரம்ப்!

Advertiesment
கொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன்! – சபதமெடுத்த ட்ரம்ப்!
, திங்கள், 6 ஜூலை 2020 (08:29 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொரோனா வைரஸை ஒழிப்பது போல எதிரிகளும் ஒழிக்கப்படுவார்கள் என அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வழக்கமாக வாண வேடிக்கை, ராணுவ அணிவகுப்பு என கோலாகலமாக கொண்டாடப்படும் சுதந்திர தின விழா இந்த முறை கொரோனா தொற்று காரணமாக மிகவும் எளிய முறையிலேயே கொண்டாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் மக்களுக்கு உரை நிகழ்த்திய ட்ரம்ப் “அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக இருப்பதானாலேயே பாதிப்புகளும் அதிகமாக உள்ளன. இந்த நிலை விரைவில் சரியாகும். அமெரிக்காவில் நவீன மருத்துவ வசதிகள், மருந்துகள் என அனைத்தும் உள்ளன. விரைவில் அமெரிக்காவில் நிலைமை சீராகும்.

அமெரிக்காவில் கொரோனா வைரசை தோற்கடிப்பது போலவே தீவிர இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள் மற்றும் பிரிவினைவாதிகள் என அனைவரும் தோற்கடிக்கப்படுவர். அமெரிக்காவில் உள்ள கோபமடைந்த கும்பல்கள் சட்டத்தை நசுக்குவதையும், வரலாற்றை அழிப்பதையும் நாம் அனுமதிக்க கூடாது” என்று பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவனந்தபுரத்தில் ட்ரிபுள் லாக்டவுன் – அதிரடி அறிவிப்பு!