அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட்! – அதிரடியாக இறங்கிய ஈரான்!

செவ்வாய், 30 ஜூன் 2020 (11:22 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸின் உதவியை ஈரான் நாடியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக்கின் பாக்தாத் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈராக் முக்கிய ராணுவ ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஈராக்கும் அமெரிக்க படைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகமானது.

இந்நிலையில் ஈராக் ராணுவ ஜெனரல் கொல்லப்பட காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை குற்றவாளியாக சேர்த்து அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது ஈரான். மேலும் அதிபர் ட்ரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸின் உதவியையும் நாடியுள்ளது. அமெரிக்க அதிபருக்கு எதிரான ஈராக்கின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: பெருந்தொற்றாக மாறும் ஆபத்து