அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதற்கு சீனாவே காரணம் என கூறியுள்ள ட்ரம்ப் நாள்தோறும் சீனா மீது குற்றசாட்டுகளை சாட்டி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கொரோனா பரவுவதற்கு முன்பிருந்தே சீனாவுடன் பொருளாதாரரீதியாக அமெரிக்காவிற்கு மோதல்கள் இருந்து வந்தது. மூன்றாம் உலக நாடு என்ற அந்தஸ்தின் பேரில் சீனா பொருளாதார சலுகைகளை அனுபவிப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து குறை கூறி வந்தார். இந்நிலையில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் மொத்தத்தையும் முடக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்கா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவிலேயே அமெரிக்கா கொரோனா பாதிப்புகளிலும், பலிகளிலும் முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப் ”கொரோனா தனது கோர முகத்தை உலகம் முழுவதும் பரப்புகிறது. இதனால் அமெரிக்கா பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனை பார்க்கும்போது சீனாவின் மீது மேலும் மேலும் கோபம் அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளார்.