Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

Advertiesment
விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

Siva

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:18 IST)
அமெரிக்காவில் நடந்த பயங்கர விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்துக்கு பைடன், ஒபாமாவின் ஆட்சி தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயிற்சி ஹெலிகாப்டர் மற்றும் பயணிகள் விமானம் மோதியதில் 67 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘விமான விபத்திற்கு பைடன், ஒபாமா கூட்டாட்சியின் பன்முகத்தன்மை கொள்கை தான் காரணம் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் பின்னணியை கண்டறியும் வரை ஓய மாட்டேன் என்றும் விமான போக்குவரத்து துறையில் பணியாற்றுபவர்கள் அதிகபட்ச தரம் மற்றும் அறிவுடன் இருக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் உளவியல் பிரச்சனை உள்ளவர்களை எல்லாம் பணியில் அமர்த்தி உள்ளனர் என்றும் இந்த பணியில் ஈடுபடுவதற்கு  தகுதி வேண்டும் என்றும் அனைத்து தவறுகளும் சீர் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!