Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் ஓட்டக்கூடாது.. செல்போன் பயன்படுத்த கூடாது. அதிபர் டிரம்புக்கு கட்டுப்பாடுகள்..!

Advertiesment
கார் ஓட்டக்கூடாது.. செல்போன் பயன்படுத்த கூடாது. அதிபர் டிரம்புக்கு கட்டுப்பாடுகள்..!

Mahendran

, செவ்வாய், 21 ஜனவரி 2025 (13:13 IST)
ஒரு அமெரிக்க அதிபர் அவருடைய நாட்டுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் உள்ள பல நாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் கொண்டவர் என்ற நிலையில் அவருக்கே சில கட்டுப்பாடுகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப பதவியேற்ற நிலையில் அமெரிக்காவை பொறுத்தவரை அதிபருக்கு சில கட்டுப்பாடுகள் சட்டத்திட்டத்தின் படி உள்ளது.

உலகையே கட்டிக்காக்கும் வானளவு அதிகாரம் கொண்டவராக இருந்தாலும், அமெரிக்க அதிபராக இருப்பவர்கள் முன்னாள் அதிபர்கள், துணை அதிபர்கள் யாரும் கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. அவர் பதவியில் இருக்கும் போது மட்டுமின்றி அமெரிக்கா அதிபர் ஆகிவிட்டாலே அவர் வாழ்நாள் முழுவதும் சாலையில் கார் ஓட்ட தடை.  ஆனால் அதே நேரத்தில், அவருக்கு சொந்தமான பங்களாக்களில் உள்ள இடத்தில் வேண்டுமானால் கார் ஓட்டிக் கொள்ளலாம்.

அதேபோல், அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக சொந்தமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, லேப்டாப்ப், டிஜிட்டல் ஐபேடு உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த கூடாது என அறிவுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் ஒபாமா அதிபராக இருந்தபோது ஆலோசகர்களின் அறிவுறுத்தலை தாண்டி ஐபேடு வைத்திருந்ததாகவும், அதேபோல், ஜோ பைடன் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது செல்போன்களை பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது அவர் பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சாப்ட்வேர் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி.. 3 பேர் கைது..!