Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 25 February 2025
webdunia

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

Advertiesment
bhagavandh man

Siva

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:14 IST)
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவ்வப்போது பண பட்டுவாடா குறித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக ,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனைப்போட்டி இங்கு எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மன் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
 
பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து சோதனையை முடித்து விட்டு அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் பல இடங்களில் பாஜகவினர் வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்கிறார்கள், ஆனால் தேர்தல் அதிகாரிகளும் டெல்லி போலீசாரும் அதை கண்டு கொள்வதில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பாஜக தலைமையின் உத்தரவின் அடிப்படையில் டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் வீட்டில் அதிகாரிகள் அத்துமீறி சோதனை நடத்தி வருகின்றனர் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈசிஆரில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறல்: மொத்தம் 3 பேர் கைது..!