அமெரிக்கா அதிபரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் திடீரென 2,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வரும் திங்கட்கிழமை, அதாவது ஜனவரி 20ஆம் தேதி, அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அந்த நிலையில், தற்போது அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருப்பதால், அவர் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
குறிப்பாக, குற்ற வழக்கில் சிக்கிய தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். ரஷ்யா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி கொடுத்தது உள்ளிட்ட சில குற்றங்கள் இதில் உள்ளன. ஆனாலும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று திடீரென அவர் 2,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதில் போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறந்த தண்டனை விதிக்கப்பட்டவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஜோ பைடன் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பொதுமன்னிப்பை வழங்கியுள்ளதாகவும், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் 2,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.