மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேற்கு மாலியின் கோப்ரி அருகே ஆயுதம் தாங்கிய நபர்களால் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தலுக்கு பொறுப்பேற்று கொள்ள எந்த குழுவும் முன்வராத நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த மற்ற இந்திய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதித் தலைநகர் பமாக்கோவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இராணுவ ஜுன்டா ஆட்சியின் கீழ் உள்ள மாலி, 2012 முதல் நிலையற்ற தன்மையுடன் போராடி வருகிறது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய JNIM போன்ற அமைப்புகளின் ஆதிக்கம் வடக்கு மாலியிலிருந்து மையப் பகுதி வரை பரவி வருகிறது. இந்தக் குழு அண்மையில் எரிபொருள் விநியோகத் தடையை விதித்து பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.
மாலீயில் வெளிநாட்டவர்களை கடத்துவது வாடிக்கையாகி வரும் நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது.