தெற்காசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக, பிரசட் ப்ரீ வியர் என்றழைக்கப்படும் இந்து கோவிலுக்கு இரு நாடுகளுமே உரிமை கோரி வருகின்றன.
கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடியாவில் இன்று மீண்டும் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கம்போடியாவின் முக்கிய பகுதிகளில் இன்று நடைபெற்ற இந்த தாக்குதலில், கண்ணீர்புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி தாய்லாந்து ராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.
இதில் பொதுமக்கள் மற்றும் புத்த மதத் துறவிகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.