தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு புத்தர் கோயிலுக்கு, தகனம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 65 வயது மூதாட்டி ஒருவர், சவப்பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிட்சானுலோக் மாகாணத்தை சேர்ந்த அந்த பெண், இரண்டு நாட்களுக்கு முன் மூச்சு நிற்பதை கண்ட அவரது சகோதரர், அவரை இறந்துவிட்டதாக கருதி சவப்பெட்டியில் வைத்து தகனத்திற்காகக் கொண்டு வந்தார். உறுப்பு தானத்திற்காக மருத்துவமனைக்கு முதலில் சென்றபோது, இறப்பு சான்றிதழ் இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டது.
கோயிலில் தகன ஆவணங்கள் குறித்து சகோதரருக்கு விளக்கமளித்து கொண்டிருந்தபோது, சவப்பெட்டியிலிருந்து சத்தம் கேட்டது. ஊழியர்கள் திறந்து பார்த்தபோது, அந்த பெண் லேசாக கண்களைத் திறந்து, கை, கால்களை அசைக்க தொடங்கியுள்ளார்.
அப்பெண் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவுகளை கோயில் நிர்வாகம் ஏற்று கொள்வதாகவும் அறிவித்துள்ளது.