பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து இன்று காலை சமூக வலைத்தளங்களில் பரவிய மரண வதந்திகளுக்கு அவரது மனைவி ஹேமமாலினி மற்றும் மகள் ஈஷா தியோல் ஆகியோர் கடுமையான கண்டனத்துடன் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகர் தர்மேந்திரா, மூச்சுத் திணறல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று இரவு மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தர்மேந்திரா காலமானதாக வந்த தவறான தகவல்களை கண்டித்த ஹேமமாலினி, "பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். எங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்," என்று தனது 'எக்ஸ்' பக்கத்தில் காட்டமாக கோரிக்கை விடுத்தார்.
மகள் ஈஷா தியோல், "என் தந்தை நலமுடன் இருக்கிறார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி," என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.