ஒடிசா மாநிலம் ஜகத்பூர் மாவட்டத்தில், ஒரு சிறுமி மூன்று ஆண்களால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமானதால், அந்த சிறுமியை உயிருடன் புதைக்க அந்த மூன்று ஆண்களும் முயற்சி செய்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜகத்பூர் அருகே உள்ள பனார என்ற கிராமத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளி ஆகிய மூன்று பேரும் ஒரு சிறுமியை நீண்ட நாட்களாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகிவிட்டார்.
சிறுமி கர்ப்பமாகிவிட்டதை அறிந்த அந்த மூவரும், தங்கள் குற்றத்தை மறைப்பதற்காக, அந்த சிறுமியை உயிருடன் புதைக்க முயன்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி சரியான நேரத்தில் மீட்கப்பட்டார்.
தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களில், இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர். மூன்றாவது நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிறுமி தந்தையின் புகாரின் அடிப்படையில், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.