டெஸ்லா நிறுவனரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க், தனக்கு உலகிலேயே அதிகபட்ச ஊதியமாக ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 82 லட்சம் கோடி) வழங்கப்பட வேண்டும் என்று டெஸ்லா நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து டெஸ்லாவின் வருடாந்திக் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.
நிறுவனத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கவே அதிக பங்குகளை கோருவதாகவும், இது பணத்துக்காக அல்ல என்றும், டெஸ்லாவின் ரோபோட்டிக்ஸ் திட்டங்களுக்கு தான் அவசியம் என்றும் மஸ்க் வாதிடுகிறார்.
மஸ்க் தனது கோரிக்கையை ஏற்காவிட்டால் டெஸ்லாவை விட்டு வெளியேறுவதாக கூறியதாகத் தெரிகிறது. மஸ்கின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் விற்பனை குறைந்தாலும், அவரை ஒரு மேதையாகக் கருதும் தரப்பினர் ஊதிய உயர்வை ஆதரிக்கின்றனர்.
உலகிலேயே மிக உயர்ந்த இந்த ஊதிய கோரிக்கை டெஸ்லா பங்குதாரர்களிடையே பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.