தொழிலதிபர் எலான் வரலாற்றிலேயே முதன்முறையாக $500 என்ற செல்வ குவியலை எட்டிய முதல் நபராகியுள்ளார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
ஃபோர்ப்ஸின் பில்லியனர் தகவலின்படி எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு $499.5 பில்லியனாக உயர்ந்துள்ளது. டெஸ்லா பங்குகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் முதல் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான எக்ஸ்ஏஐ வரையிலான அவரது பிற நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்தது ஆகியவற்றின் பின்னணியில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
டெஸ்லா மட்டும் அல்ல, அவரது மற்ற நிறுவனங்களும் இந்த ஏற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன. தனியார் விண்வெளி ஏவுதல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அதிக மதிப்பீடுகளை பெற்று வருகிறது. அதே சமயம், ஓப்பன்ஏஐ மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் நோக்குடன் மஸ்க் சமீபத்தில் தொடங்கியுள்ள புதிய முயற்சியான எக்ஸ்ஏஐ மதிப்பும் உயர்ந்துள்ளது.
ஃபோர்ப்ஸின் பில்லியனர் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பவர் ஒரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் ஆவார். அவரது நிகர மதிப்பு சுமார் $351.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கார், ராக்கெட் மற்றும் ஏஐ என பல தொழில்துறை பிரிவுகளில் மஸ்க் கொண்டுள்ள அசாதாரண ஆதிக்கம், அவரது நிதி ஏற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுவதுடன், உலகில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய செல்வந்தர் என்ற அவரது நிலையை உறுதிப்படுத்துகிறது.